தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக, ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நகரப்பகுதிகளில் அனைத்து மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன.
கரோனா அச்சம் காரணமாக பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதை போல வியாபார நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கும் கடைகளை திறக்காமல் தாங்களாகவே முன்வந்து மூடியிருந்தனர்.
மேலும் பெட்ரோல் நிலையங்கள், டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று 3 ஆயிரத்தை தாண்டியுள்ளன.
இதையும் படிங்க: ஊரடங்கால் வருமானம் பாதிப்பு:கடனை கட்ட முடியாமல் டாக்சி ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை