திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜூலை 24) வரை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு ஆயிரத்து 767 ஆக இருந்தது.
இந்நிலையில், இன்று ( ஜூலை 25) புதிதாக 142 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு ஆயிரத்து 909 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ( ஜூலை 24) வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 466 ஆக உள்ளது, சிகிச்சை பலனின்றி 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், பெங்களூருவிலிருந்து வந்த ஒருவர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 45 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற 17 பேர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 55 பேர், முன் களப்பணியாளர்கள் 3 பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து திரும்பிவந்த 21 பேர் உள்ளிட்ட 142 பேருக்கு இன்று ( ஜூலை 25) மட்டும் கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: 'மதுரையில் மூன்றாவது கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு அனுமதி' - சு. வெங்கடேசன் எம்.பி