திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் ராஜுவ்காந்தி சிலை அருகே ஆரணி நகர காவல் ஆய்வாளர் தலைமையில் கரோனா விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
இதில், சத்தான உணவை உண்பது, வெளியில் சென்று வந்தால் கை மற்றும் கால்களை சுத்தமாக கழுவி எவ்வாறு கரோனா பரவலை தடுப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது, தலைக்கவசம் அணியாமல் செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டக்கூடாது என்பது குறித்தும், போலிமருத்துவர், போலி சாமியார்கள் குறித்தும் மக்களுக்கு சமூகம் சார்ந்த கருத்துகளை நாடக கலைஞர்கள் தத்ரூபமாக நடித்துக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு - திருப்பூர் மாணவர் மாநில அளவில் முதலிடம்!