ETV Bharat / state

'தண்ணீர் பஞ்சம் தீரும்வரை குளிர்பான கம்பெனிகள் மூட வேண்டும்' - விக்ரம ராஜா

திருவண்ணாமலை: "தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும் நிலையில், குளிர்பான கம்பெனிகள் நிலத்தடி நீர் எடுப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்" என, தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் விக்ரம ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா
author img

By

Published : Jul 6, 2019, 11:51 PM IST

இது குறித்து செய்தியாளர்கள சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் விக்ரம ராஜா, "நாடாளுமன்றத்தில் முதல்முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புறநானூறு உரை மேற்கோள் காட்டி பேசியதை வரவேற்கின்றோம். ஒன்றரை கோடி ரூபாய் வரி செலுத்தும் வணிகர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிவித்ததை, அனைத்து தரப்பு வரி செலுத்துபவர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக அமைச்சரிடம் மனு அளிக்க உள்ளோம்.

வணிகர் சங்கத் தலைவர் விக்ரம ராஜா பேட்டி

அன்றாடம் பயன்படுத்தக் கூடிய உணவு பொருட்களுக்கு வரி விலக்கு, டோல்கேட் கட்டணம் குறைப்பு உள்ளிட்டவைகளை எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் அது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், ஒட்டுமொத்த விலைவாசியும் உயர்ந்து அது மக்களை இன்னலுக்கு ஆக்கும். தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும் நிலையில் உயிரை குடிக்கும் நச்சு குளிர்பான கம்பெனிகள் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி காசாக்குவதை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

Intro:தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும் வேளையில் உயிரை குடிக்கும் நச்சு குளிர்பானக் கம்பெனிகள் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி காசாக்குவது மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும், தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா பேட்டி.

Body:தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா இன்று திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்தார் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது,

பாராளுமன்றத்தில் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் புறநானூறு உரை மேற்கோள் காட்டி பேசியதை வரவேற்கின்றோம்.

இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக நிதியமைச்சர் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிந்த வணிகர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிவித்துள்ளார்கள். இது ஒன்றரை கோடி ரூபாய் வரி செலுத்துபவர்களுக்கு மட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்த ஓய்வூதியத்தை அனைத்து தரப்பு வரி செலுத்துபவர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக அமைச்சரிடம் மனு அளிக்க உள்ளோம்.

அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களுக்கு வரி விலக்கு அளிப்பார்கள் என்று எதிர்பார்த்து இருந்தோம். டோல்கேட் கட்டணம் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை இது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்போம் என்று கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது.

நதிநீர் இணைப்பு பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளிவராதது வருத்தமளிக்கிறது.

பெட்ரோல் டீசல் விலை ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை 2 ரூபாய் 30 காசு வரை உயர்ந்துள்ளது விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும்.

தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும் வேளையில் உயிரை குடிக்கும் நச்சு குளிர்பானக் கம்பெனிகள் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி காசாக்குவது மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம் , பொருளாளர் செந்தில்மாறன், வேலூர் மண்டல தலைவர் கிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Conclusion:தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும் வேளையில் உயிரை குடிக்கும் நச்சு குளிர்பானக் கம்பெனிகள் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி காசாக்குவது மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும், தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா பேட்டி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.