ETV Bharat / state

இருளர் சமுதாய மாணவிகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்! - collector Provide st certificate

திருவண்ணாமலை: இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு சாதிச் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி வழங்கினார்.

collector Provide st certificate residence in thiruvannamalai

author img

By

Published : Sep 16, 2020, 7:31 PM IST

திருவண்ணாமலை நகரம் பே.கோபுரம் 10ஆவது தெருவில் வசிக்கும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்மணிக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் பெண் செல்வி வினோதினி பி.காம், இரண்டாம் ஆண்டு கரன் கல்லூரியில் படித்து வருகிறார். இரண்டாவது பெண் மணிமேகலை 11ஆண் வகுப்பு படித்து வருகிறார். மூன்றாவது பெண் புவனேஸ்வரி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நான்காவது பெண் மோனிஷா 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கணவரை இழந்த சித்ரா, கால்வாய்களில் மண்ணெடுத்து அதில் கிடைக்கும் சிறு சிறு தங்கம், வெள்ளி நகைகளை கடையில் கொடுத்து பணம் பெற்று சொந்த வீடு கட்டியும் தனது நான்கு பெண் பிள்ளைகளையும் படிக்க வைத்துள்ளார். இவரின் மகள் வினோதினி கடந்த மாதம் மாவட்ட ஆட்சியரிடம் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மனு அளித்தார்.

அந்த விண்ணப்பத்தை‌ பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று சாதிச் சான்றிதழ், ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான காசோலையையும் வழங்கினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.