திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் திருவண்ணாமலை ரயில் நிலையம் அருகில் ரூ.30.38 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத் துறை மூலம் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டுவருகிறது. இந்நிலையில் மேம்பாலப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று (பிப். 3) நேரில் ஆய்வுமேற்கொண்டார்.
அப்போது மேம்பாலத்திற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்தும், முழுமையாக நிறைவடையும் காலம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் மேம்பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்குமாறும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த திருப்பரங்குன்றம் கோயில் யானை