திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ளது தேனிமலை. இப்பகுதி பொதுமக்கள் அங்குள்ள காலி நிலத்தை சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அந்த இடம் தனக்கு சொந்தமானது எனக்கூறி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், தனி ஒருவருக்கு இடத்தை அளந்து கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர், சுடுகாட்டுக்கு போதிய அளவு இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும் எனக்கோரி, சாலை ஓரத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து, சுடுகாட்டு ஆக்கிரமிப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகளை பொதுமக்கள் உடைத்து எறிந்தனர். இதனால் அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.