ETV Bharat / state

தி.மலையில் கரோனா நோய்த்தடுப்புப்பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு! - முதலமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா நோய் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு துறைகளின் சார்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

Chief Minister's study on corona disease prevention in Thiruvannamalai!

author img

By

Published : Sep 9, 2020, 12:43 PM IST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி கரோனா நோய்த் தடுப்பு மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முன்னதாக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட 16 துறைகள் மூலம் 18, 279 பயனாளிகளுக்கு ரூ.134 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவுத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தாட்கோ வேளாண்மை துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.52.59 கோடி மதிப்பீட்டில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

கரோனா நோய்த்தடுப்புபணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு

பின்னர் பொதுப்பணித் துறை, தோட்டக்கலைத் துறை, பால்வளத் துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.19.20 கோடி மதிப்பீட்டில் 11 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் இன்று(செப். 09) அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில் கரோனா நோய்த் தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அரசுத் துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க:பண்டாரவிளை திமுக பிரமுகர் மகன் மீது பொதுமக்கள் புகார் !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.