ETV Bharat / state

திருவண்ணாமலையில் கொட்டும்மழையில் ஒலிம்பியாட் ஜோதியை ஏந்தி சென்ற அமைச்சர்!

author img

By

Published : Jul 26, 2022, 4:43 PM IST

திருவண்ணாமலையில் 5 ஆயிரம் மாணவர்கள், பொதுமக்களுடன் கொட்டும் மழையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேரணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு விழா

திருவண்ணாமலை: இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் சர்வதேச 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற வியாழக்கிழமை தொடங்க உள்ளது. சென்னையில் வரும் 28ஆம் தேதி தொடங்கும் இந்தப் போட்டியை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஜோதி பேரணி பல்வேறு மாவட்டங்களில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கோயம்புத்தூரில் இருந்து ஒலிம்பியாட் ஜோதி நேற்று இரவு புறப்பட்டு இன்று காலை திருவண்ணாமலை வந்தடைந்தது. கொட்டும் மழையில் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஜோதி பேரணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பெரியார் சிலை அருகே தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலையின் முக்கிய வீதிகளான அண்ணா சிலை, காந்தி சிலை, ராஜகோபுரம், கடலைக்கடை சந்திப்பு, பெரிய தெரு, சின்னக்கடை வீதி பேருந்து நிலையம் உள்ளிட்ட 11 முக்கிய இடங்களில் தொடர் ஜோதியானது கொண்டுவரப்பட்டு போளூர் ரோட்டில் அமைந்துள்ள ஈசானிய மைதானத்தில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. கொட்டும் மழையில் வழி நெடுகிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஜோதியை உற்சாகமாக வரவேற்றனர்.

போளூர் சாலையில் உள்ள ஈசானிய மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், உள்ளிட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர். மாணவர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் என 5-ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையிலும் பேரணியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

ஈசானியத்திடலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் சாகச நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மாவட்ட அளவில் செஸ் விளையாட்டில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

திருவண்ணாமலையில் கொட்டும்மழையில் ஒலிம்பியாட் ஜோதியை ஏந்தி சென்ற அமைச்சர்!

இதனைத்தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய அவர், ’உலக அளவில் நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியானது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது என்றால்; அதற்கு முழு முதல் காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் தான்’ என்றும் அவர் பேசினார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.