ETV Bharat / state

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பழங்கள் வழங்கிய நற்பணி மன்றங்கள்! - பழங்கள் வழங்கிய நற்பணி மன்றங்கள்

திருவண்ணாமலை: நூற்றுக்கும் மேற்பட்ட சாதுக்கள் மற்றும் பொதுமக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் விதமாக, இந்திய அரசின் நேரு யுவ கேந்திராவின் சார்பில் பழங்கள் வழங்கப்பட்டன.

Charity forums that provided fruits to boost immunity for People

author img

By

Published : Aug 9, 2020, 12:18 PM IST

திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள ராமர்பாதம் கோயில் அருகே, இந்திய அரசின் நேரு யுவ கேந்திரா மற்றும் ரிபிங் எனர்ஜி இன் ஃபேக்டரி, சுவாமி விவேகானந்தா மகளிர் நற்பணி மன்றம் இணைந்து கரோனா நோய்த் தொற்றில் இருந்து சாதுக்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்க நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் கலந்துகொண்டு நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் செவ்வாழை, பேரிக்காய், ஆரஞ்சு உள்ளிட்டப் பழங்களை வழங்கினார்.

கிரிவலப்பாதையில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சாதுக்கள் மற்றும் பொதுமக்கள், நீண்ட வரிசையில் நின்று, முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து பழ வகைகளை வாங்கிச் சென்றனர்.

தொடர்ந்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில், வரும் நாள்களில் பழ வகைகளை அனைத்துப் பகுதி மக்களுக்கும் வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன்வர வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.