திருவண்ணாமலை: செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் ஊராட்சி அருகே திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு நோக்கி கர்நாடக பதிவு எண் கொண்ட கார் சென்று கொண்டிருந்தது. அதே சாலையில், சிங்காரப்பேட்டையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி லாரி ஒன்று வந்த கொண்டிருந்துள்ளது.
இந்த நிலையில், திடீரென எதிர்பாராத விதமாக லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் கார் முற்றிலுமாக நொறுங்கியது. மேலும், இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள், நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு பெண் பலத காயங்களுடன் உயிருக்கு போரடியுள்ளார்.
இதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் காருக்குள் உயிரிழந்த நிலையில் சிக்கி இருந்தவர்களையும், பலத்த காயங்களுடன் இருந்த பெண்னையும் பொதுமக்களின் உதவியோடு மீட்டனர். தொடர்ந்து பலத்த காயமடந்த பெண்னை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனைக்குக் அனுப்பிவைத்தனர் மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் செங்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையே விபத்து நேரிட்டதும் லாரி ஓட்டுநர் தப்பிச் சென்றதாகவும், இதனால் விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், தொடர்ந்து விபத்து எப்படி நேரிட்டது என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/ccWOodCAMb
— TN DIPR (@TNDIPRNEWS) October 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/ccWOodCAMb
— TN DIPR (@TNDIPRNEWS) October 15, 2023திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/ccWOodCAMb
— TN DIPR (@TNDIPRNEWS) October 15, 2023
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், "திருவண்ணாமலை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் இன்று (அக் 15) காரும், லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த விபத்தில் படுகாயமடைந்து திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண
நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கூடுதல் விலையா? சட்டப்படி நடவடிக்கை..! லியோ ரிலீஸ் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியது என்ன?