திருவண்ணாமலை வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமம் பக்கிரி தர்காப் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (57). இவர், பல ஆண்டுகளாக ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி 27ஆம் தேதி முகமது இஸ்மாயில், அவரது தம்பி மகபூப்பாஷா ஆகிய இருவரும் வந்தவாசி நகரில் பொட்டி நாயுடு தெருவில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வருவதாக வந்தவாசி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வந்தவாசி காவல் உதவி ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமது இஸ்மாயிலை கைது செய்தனர்.
பின்னர், அவரிடமிருந்து 1 கிலோ 125 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். முக்கிய குற்றவாளியான முகமது இஸ்மாயில், தொடர்ந்து கஞ்சா தொழிலில் ஈடுபட்டு வந்ததால் அவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பி. சக்கரவர்த்தி பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, முகமது இஸ்மாயிலை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவரை வேலூர் மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.
இதையும் படிங்க: வீட்டில் தனியாக இடம் ஒதுக்கி கஞ்சா பயிரிட்ட நபர் கைது!