ETV Bharat / state

வேகமாக வந்த பேருந்தின் டயரில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு - bus collides over aged man at arani

திருவண்ணாமலை: ஆரணியில் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த முதியவர் மீது தனியார் பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்தார்.

old man death in arani after bus collided

author img

By

Published : Feb 9, 2021, 2:25 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி சாலையில் ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்த முதியவர் மீது பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் நிலைதடுமாறிய முதியவர் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி உயிருக்குப் போராடினார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆரணி நகர காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவரை மீட்டு ஆரணி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே முதியவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆரணி நகர காவல்துறையினர் வழக்குபதிந்து விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரை தேடிவருகின்றனர். விபத்தில் உயிரிழந்த முதியவர் யார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க... மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.