திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "ஒரு சொல் மந்திரம் என்ற அடிப்படையில் ஒரே குரலாக வணிகர்களின் வாக்கு வங்கிகளை ஒன்று திரட்டி வருகிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் ஒரு கோடி பேர். பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வருகிறோம். அந்த கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. பல்வேறு தரப்புகளுக்கு அரசு பல சலுகைகளை அள்ளி கொடுத்து வருகிறது. ஆனால் வியாபாரிகளுக்கு கில்லி கொடுப்பதற்கு கூட அரசு மனமில்லாமல் இருக்கிறது.
எங்களது கோரிக்கைகளை பல்வேறு அரசியல் கட்சியினர் கேட்டு வருகின்றனர். அதனை நிறைவேற்றும் கட்சிக்கு தான் எங்கள் வாக்கு. ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக வணிகர்கள் வாக்கு அமையும்.
இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலையேற்றம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டு இருக்கிறது. ஒரு மாதத்திற்கு மூன்று முறை சமையல் கேஸ் சிலிண்டர் விலையேற்றம் அடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: தேர்தல் நடத்தை விதிகள் - மாவட்ட ஆட்சியர் ஆலோசனை