திருவண்ணாமலை மாவட்டம் கோட்டை புதிய காலனியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ்(27). இவர் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டி வந்தார். அப்போது அவ்வழியாக இட்லி வாங்க கடைக்கு சென்ற 17 வயது சிறுமியை ஆட்டோவில் ஏற்றி பாலியல் வன்புணர்வு முயற்சி செய்தார்.
சிறுமி ஆட்டோவிலிருந்து குதித்து அழுதார். உடனே பொதுமக்கள் அங்கு வர, பிரகாஷ் ஆட்டோவில் தப்பிச் சென்றார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிறுமியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து சிறுமி நடந்ததை காவல் துறையினரிடம் கூறினார். அதனடிப்படையில் ஆட்டோ ஒட்டுநர் பிரகாஷை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: மாஸ்டர் படம் காட்டுவதாக சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு போலீஸ் வலை வீச்சு!