திருவண்ணாமலை அடுத்த ராமவிட்டோபா நகர் பகுதியில் விவசாய கிணற்றில் சந்தேகமான முறையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக, காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்து சம்பவ இடம் சென்ற காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், தண்ணீரில் மிதந்து கிடந்த உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.