திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி மற்றும் சாத்தனூர் அணை ஆகிய இடங்களில் அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, "நமது கட்சியினர் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை என்ற கவலை வேண்டாம், சட்டப்பேரவை உறுப்பினராக இல்லை என்ற கவலை வேண்டாம், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக இல்லை என்ற கவலை வேண்டாம், ஊராட்சி மன்றத் தலைவராக இல்லை என்ற கவலை வேண்டாம், ஆனால் அத்தனைக்கும் மேலான அரசு நம் கைகளில் உள்ளது. அதிமுக தொண்டர்கள் வைக்கின்ற கோரிக்கையை செயல்படுத்தக் கூடிய இடத்தில் அதிகாரமிக்க அரசு மற்றும் கட்சித் தலைமை உள்ளது" என்று பேசினார்.
அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்களிடையே வாக்குவாதம்! - AIADMK Consultative Meeting
திருவண்ணாமலை: அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.