ETV Bharat / state

அண்ணாமலையார் கோயில் ஆனி திருமஞ்சன விழா: ஐயங்குளத்தில் தீர்த்த வாரி - ஆடி மாதம்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி ஐயங்குளத்தில் தீர்த்த வாரி வெகு விமரிசையாக நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயில்
author img

By

Published : Jul 18, 2019, 11:50 AM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தட்சிணாயின புண்ணிய காலத்தை முன்னிட்டு, ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 8ஆம் தேதி அண்ணாமலையார் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் ஆனி மாதம் தொடர்ந்து பத்து நாட்கள் இந்த பிரம்மோற்சவ விழா நடைபெறும்.

அதன்படி இன்று அதிகாலை கோயிலின் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

அண்ணாமலையார் கோயில்
பின்னர், இறுதி நாளான இன்று திருவண்ணாமலை நகரில் உள்ள ஐயங்குளத்தில் தீர்த்த வாரி நடைபெற்றது. அண்ணாமலையார் கோயிலில் இருந்து சந்திரசேகரர் வீதி உலா வந்து ஐயங்குளத்தில் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனைகள் நடைபெற்றது. மேலும் சூலத்தினை ஐயங்குளத்தில் 3 முறை மூழ்கி பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகளுடன் தீர்த்த வாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Intro:அண்ணாமலையார் கோயில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி ஐயங்குளத்தில் தீர்த்த வாரி வெகு விமர்சையாக நடைபெற்றது.Body:அண்ணாமலையார் கோயில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி ஐயங்குளத்தில் தீர்த்த வாரி வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தட்சிணாயின புண்ணிய காலத்தை முன்னிட்டு ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 8ம் தேதி அண்ணாமலையார் சந்நதி முன்பாக உள்ள 64 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும். இதில் சூரியன் வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி நகரும் காலமான ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக தட்சிணாயின புண்ணிய கால கொடியேற்று விழா நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தொடர்ந்து பத்து நாட்கள் இந்த பிரம்மோற்சவ விழா நடைபெறும். 
அதன்படி இன்று அதிகாலை கோவிலின் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 10 நாட்கள் காலை மற்றும் இரவு விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
பின்னர் இறுதி நாளான இன்று திருவண்ணாமலை நகரில் உள்ள ஐயங்குளத்தில் தீர்த்த வாரி நடைபெற்றது. அண்ணாமலையார் கோயிலில் இருந்து சந்திரசேகரர் வீதி உலா வந்து ஐயங்குளத்தில் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீப ஆராதனைகள் நடைபெற்றது.
மேலும் சூலத்தினை ஐயங்குளத்தில் 3 முறை மூழ்கி சூலத்திற்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் நடைபெற்று தீர்த்த வாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.Conclusion:அண்ணாமலையார் கோயில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி ஐயங்குளத்தில் தீர்த்த வாரி வெகு விமர்சையாக நடைபெற்றது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.