திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் கடந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கையாக ரூ.1.34 கோடி வருவாய் கிடைத்தது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிரிவலமும் வருகின்றனர். இவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கை செலுத்திவிட்டு செல்வது வழக்கம்.
இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி முடிந்த பின்னர் நடக்கும். அதன்படி கடந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது.
இதில் உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 34 லட்சத்து 27ஆயிரத்து 677 ரூபாயும், 317 கிராம் தங்கமும், 560 கிராம் வெள்ளியும் வருவாயாக கிடைத்திருக்கிறது .
இதையும் படிங்க: ராமநாதசுவாமி கோயில் உண்டியல் திறப்பு: 71 லட்சம் ரூபாய் காணிக்கை