திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் ஆலயத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி உற்சவம் மிக விமர்சையாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.
இந்த ஆண்டு கரோனா தொற்று கட்டுப்பாடுகள் முழுவதும் விலக்கப்பட்டதால் மூன்றாம் நாளான நேற்று மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மனுக்கு ஸ்ரீ கெஜலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஷோடச உபசாரம் என்று அழைக்கப்படுகின்ற 16 வகை தீபா ஆராதனை காண்பிக்கப்பட்டது.
ஓதுவார் மூர்த்திகள் அம்பாள் பாடல்கள் பாடியும், மகா தீப ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: நவராத்திரி 3ஆம் நாள் : பட்டாபிஷேக அலங்காரத்தில் மீனாட்சி