திருவண்ணாமலை: பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்கி தரும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலையாகும். இங்கு உள்ள புகழ்மிக்க அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்காா்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகின்றது.
இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ஆம் தேதி அண்ணாமலையார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொங்கியது. திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் 6ஆம் நாளான இன்று காலையில் பள்ளி மாணவர்கள் 63 நாயன்மார்கள் பல்லக்கை சுமந்து மாடவீதியில் வலம் வந்தனர். முன்னதாக விநாயகர் மற்றும் சந்திரசேகர் மற்றும் 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
மேலும் சிவபொருமானுக்கு தொண்டு செய்த அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், சம்பந்தர், கண்ணப்ப நாயனார், சிறுதொண்டு நாயனார் உள்ளிட்ட 63 நாயன்மார்களை சிறப்பிக்கும் வகையில் 59ஆவது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த விழாவில் ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 63 நாயன்மார்களை சுமந்து கொண்டு மாடவீதியுலா வருவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டும் மாணவர்கள் 63 நாயன்மார்கனை சுமந்து மாடவீதியுலா வந்தனர். இதனைத் தொடந்து விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்திலும் மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று இரவு பஞ்சமூர்த்திகள் 113ஆம் ஆண்டாக வெள்ளி ரதத்தில் மாட வீதியுலா நடைபெறும்.
இதையும் படிங்க: டிசம்பர் 5 ஆம் தேதி முதலமைச்சர் டெல்லி பயணம்