திருவண்ணாமலை: ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் அஸ்வினி நட்சத்திரம் அன்று சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அன்னாபிஷேகத்தில் சிவபெருமானுக்கு அன்னத்தினால் அலங்கரித்து வடை, அப்பம் உள்ளிட்டவை படைக்கப்பட்டு தீப ஆராதனைகள் நடைபெறும்.
அதன்படி நேற்று (நவ. 7) அருணாசலேசுவரர் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு காய், கனிகள் உள்ளிட்டவை கொண்டு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் நடைபெற்றன.
அன்னாபிஷேகத்தின் போது சிவனுக்கு படைத்த சாதத்தினை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை ஐப்பசி மாத கிரிவலம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..