ETV Bharat / state

கரோனா நிவாரணத் தொகை வழங்காததைக் கண்டித்து ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்!

தி.மலை: கரோனா நிவாரணத் தொகை வழங்காததைக் கண்டித்து திருவண்ணாமலை காந்தி நகரிலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு ஏஐடியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்  tiruvannamalai aituc protest  திருவண்ணாமலை மாவட்டச் செய்திகள்  tiruvannamalai district news
கரோனா நிவாரணத் தொகை வழங்காததைக் கண்டித்து ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்
author img

By

Published : May 11, 2020, 3:40 PM IST

திருவண்ணாமலை காந்தி நகரிலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பு மாவட்ட ஏஐடியுசி சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, பதிவு செய்த தொழிலாளர்கள் பாதி பேருக்கு மேல் தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரணத் தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையும், தொழிலாளருக்கு எந்தவொரு நிவாரணத் தொகையும் வழங்காத அரசைக் கண்டித்தும் ஏஐடியுசி கண்டன முழக்கங்களை எழுப்பியது.

ஏஐடியுசி சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

உழைக்கும் மக்களுக்கும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 7,500 ரூபாயை கரோனா நிவாரணமாக வழங்கவேண்டும் என வலியுறுத்திய ஏஐடியுசி தொழிற்சங்கம், அண்டை மாநிலங்களைப் போல் மக்களின் வீடுகளுக்குச் சென்று நிவாரணப் பொருள்களை வழங்கவேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியது. மேலும், அரசு டாஸ்மாக் கடையை திறந்ததற்கு எதிராக கண்டனத்தையும் பதிவுசெய்தது.

இதையும் படிங்க: வேலை நேரத்தை 12 மணியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.