ETV Bharat / state

'மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்காவிட்டால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க முடிவு'

author img

By

Published : Nov 23, 2019, 7:49 AM IST

நாகப்பட்டினம்: டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்காவிட்டால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என, மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் அவசரக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

advocate

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராம.சேயோன் கூறுகையில்,

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக மயிலாடுதுறையை தலைமையிடமாகக்கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர். தென்காசி, செங்கல்பட்டு உள்ளிட்ட புதிய மாவட்டங்களை தமிழ்நாடு அரசு நடப்பாண்டில் அறிவித்தது.

ஆனால், மயிலாடுதுறை மக்களின் நீண்டநாள் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் இப்பகுதியில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தின.

advocate

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்துக்கான வழக்கறிஞர் கூட்டமைப்பின் அவசரக் கூட்டத்தில் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை அறிவிக்க தமிழ்நாடு அரசு தவறினால், உள்ளாட்சித் தேர்தலை மயிலாடுதுறை உட்கோட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இவ்வாறு கூறினார்.

Intro:தமிழக அரசு டிசம்பர் 31-க்குள் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்காவிட்டால் அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் அவசர கூட்டத்தில் கோரிக்கை:-

Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக மயிலாடுதுறையை தலைநகராகக்கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு நடப்பாண்டில் தென்காசி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு புதிய மாவட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால், மயிலாடுதுறை மக்களின் நீண்டநாள் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் இப்பகுதியில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தின. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர் கூட்டமைப்பின் அவசர கூட்டத்தில் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மயிலாடுதுறையை தலைநகராக கொண்ட புதிய மாவட்டத்தை அறிவிக்க தமிழக அரசு தவறினால் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலை மயிலாடுதுறை உள்கோட்டை சேர்ந்த அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் புறக்கணிக்க வேண்டுமென தேர்தல் புறக்கணிப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராம.சேயோன் வெளியிட்டுள்ளார்.

பேட்டி:- வழக்கறிஞர் ராம.சேயோன் (மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்.)

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.