ETV Bharat / state

4 ஏக்கர் நிலம் அபகரிப்பு; அன்னசத்திர நிர்வாகி அழகப்பன் மீது கவுதமி புகார்.. தீவிர தேடுதலில் போலீசார்! - அழகப்பன்

Tiruvannamalai: திருவண்ணாமலை அடுத்த ஐங்குணம் கிராமத்தில் 4 ஏக்கர் நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக அன்னசத்திர நிர்வாகி அழகப்பன் மீதும், நடிகை கவுதமி புகார் அளித்துள்ளார்.

actress-gauthami-has-compliant-the-fraudulent-sale-of-4-acres-of-land
நடிகை கவுதமி பரபரப்பு புகார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 8:04 AM IST

திருவண்ணாமலை: நில அபகரிப்பு தொடர்பாக நடிகை கவுதமி அளித்த புகாரின் அடிப்படையில், தலைமறைவாக உள்ள அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தைச் சார்ந்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

நடிகை கவுதமி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், நடுவராகவும் பணியாற்றியுள்ள இவர், பாரதிய ஜனதா கட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்தார்.

இந்நிலையில் பற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கவுதமி, தனது சொத்துக்களுக்கு பவர் ஏஜென்டாக சினிமா பைனான்சியர் அழகப்பனை நியமித்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை அருகே தனது நிலத்தை நல்ல விலைக்கு விற்றுத் தருமாறு கவுதமி அழகப்பனனை அனுகியுள்ளார்.

அப்போது தனது நிலத்தை ரூ.11 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதை மறைத்து, வெறும் ரூ.4 கோடி மட்டும் தனக்கு தரப்பட்டது கவுதமிக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நடிகை கவுதமி புகார் கொடுத்தார்.

இந்த மோசடியால் அதிர்ச்சி அடைந்த நடிகை கவுதமி, அழகப்பன் மீது சந்தேகம் கொண்டு தனது சொத்து விபரங்களை சரிபார்த்தபோது, திருவண்ணாமலை அடுத்த ஐங்குணத்தில் தனது 4 ஏக்கர் நிலத்திலும் மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

அதேநேரம், நிலத்தின் உரிமையாளரான கவுதமி பெயரோடு அழகப்பனின் மனைவியையும் சேர்த்திருப்பதை கவுதமி கண்டுபிடித்து, திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவில் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து இந்த வழக்கில் அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள் மற்றும் மகன், மருமகள் உள்பட 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அழகப்பன், திருவண்ணாமலை தேரடித் தெருவில் உள்ள அன்னசத்திரத்தின் முக்கிய நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் சென்னை மற்றும் திருவண்ணாமலையில் நடிகை கவுதமி புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அழகப்பன் அவரது குடும்பத்தினரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அரசு பணியில் இருந்து கொண்டு வெளி மாநிலத்தில் சட்டப்படிப்பு ? - மதுரை மாநகராட்சி சட்ட அலுவலருக்கு எதிராக மனு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.