திருவண்ணாமலை: கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள வேட்டவலம் பகுதியைச் சேர்ந்த முத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆபிரகாம். இருக்கும் சகாயமேரி என்ற பெண்ணிற்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஆபிரகாம் அருகில் உள்ள பொன்னமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணோடு கடந்த சில ஆண்டுகளாக முறையற்ற உறவிலிருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சகாயமமேரி அடிக்கடி கணவரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக இருவரும் கடந்த சில வருடங்களாகப் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் அண்மையில் கணவருடன் சேர்ந்து வாழ நினைத்த சகாயமேரி அவரது வீட்டிற்குச் சென்றபோது மாமனார் மற்றும் கணவரின் உறவினர்கள் வீட்டில் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சகாயமேரி வேட்டவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், காவல் துறையினர் தனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றம்சாட்டிய சகாயமேரி நேற்று(டிச.10) திடீரென கணவரின் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தியதோடு, பின்னர் வேட்டவலம் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
புகாருக்கு ஆளான ஆபிரகாம் என்பவரைத் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. புகார் தொடர்பாக அவரது விளக்கத்தை அளிக்கும் பட்சத்தில் அதனை வெளியிட ஈடிவி பாரத் தயாராக உள்ளது.
இதையும் படிங்க: வடிவேலு பட பாணியில் அம்மன் கோயிலில் சாமி கும்பிடுவது போல் நகை திருட்டு.. சிசிடிவி காட்சி வெளியானது!