ETV Bharat / state

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்யப் பணம் வாங்கும் ஊழியரின் வீடியோ வைரல்..! - Thiruvannamalai Annamalaiyar Temple

Tiruvannamalai Annamalaiyar Temple: திருவண்ணாமலை மாவட்டம், அண்ணாமலையார் கோயிலுக்குச் சாமி தரிசனத்திற்காக வருகை புரியும் வெளிமாநில பக்தர்களிடம் இருந்து கோயில் ஊழியர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு குறுக்கு வழியில் அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Tiruvannamalai Annamalaiyar Temple
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பணம் வாங்கும் ஊழியர் வீடியோ வைரல்..! அரசு நடவடிக்கை எடுக்குமா..?
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 4:19 PM IST

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்யப் பணம் வாங்கும் ஊழியரின் வீடியோ வைரல்..!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்குவது அண்ணாமலையார் திருக்கோயிலாகும். அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

மேலும், அண்ணாமலையார் கோயிலுக்குத் தினமும் வெளி மாவட்டம், வெளி மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிவர். அதனைத்தொடர்ந்து விடுமுறை நாட்களிலும் மற்றும் திருவிழாக்கள் போன்ற நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரைத் தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதை சுற்றி வருவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த டிச.16 ஆம் தேதி அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த வெளி மாநில பக்தர்களிடமிருந்து கோயில் ஊழியர்கள் பணம் பெற்றுக்கொண்டு குறுக்கு வழியில் சாமியைத் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

சுமார் 5 முதல் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வரும் பக்தர்கள் மத்தியில், பணத்தைப் பெற்றுக்கொண்டு குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்ய வைத்த கோயில் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் தாங்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய வேண்டி, கோயில் ஊழியர்களை சில புரோக்கர்கள் மூலம் அணுகி மக்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்ய அழைத்துச் செல்வதாக பெரும் குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருவதாகப் பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், இந்த மூன்று மாநிலங்களிலிருந்து வரும் பெரிய தொழிலதிபர்கள், பெரும் பணக்காரர்கள், மற்றும் வசதி மிக்கவர்கள் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை ஊழியர்களிடம் கொடுத்து கோயிலின் கருவறையின் உள்ளேச் சென்று அமர்ந்து சாமி தரிசனம் செய்து வருவது வாடிக்கையான ஒன்றாக மாறி விட்டதாகப் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் 4 முக்கிய ரயில்கள் நின்று செல்லும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.