திருவண்ணாமலை மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் செப்டம்பர் 11 முதல் 27ஆம் தேதிவரை தூய்மை சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகின்றது. இதன் நோக்கம் நம்மைச் சுற்றியுள்ள இடங்கள், வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றினை துய்மையாக வைத்துக்கொள்ள வலியுறுத்தி செயல்படுத்தப்படுகின்றது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக நெகிழிப் பயன்பாடு இல்லாத மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தினை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பரப்புரைகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இதன் ஒரு பகுதியாக இன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம், ரத ஊர்வலத்தினை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நெகிழியை மறுசுழற்சி செய்யும் நவீன இயந்திரங்கள் பொருத்தும் பணி தீவிரம்!