ETV Bharat / state

காதலியை பெண் கேட்கச் சென்ற காதலன் மனமுடைந்து தற்கொலை

ஆரணி அருகே காதலியை பெண் கேட்டுச் சென்ற காதலனை, பெண்ணின் தந்தை கடுமையாக தாக்கிதால் மனமுடைந்து அந்த காதலன் தற்கொலை செய்துகொண்டார்.

காதலியை பெண் கேட்கச் சென்ற காதலன் மனமுடைந்து தற்கொலை
காதலியை பெண் கேட்கச் சென்ற காதலன் மனமுடைந்து தற்கொலை
author img

By

Published : Oct 18, 2022, 10:08 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கஸ்தம்பாடி கிராமத்தில் ஏழுமலை - செல்வராணி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகனான சாமராஜ் (21), சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அதேபோல் இதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் - அஞ்சலை தம்பதியினரின் மூத்த மகள் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சாம்ராஜும் அந்த மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. அப்போது மாணவியின் தரப்பில் காதலுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதோடு மாணவியை உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் சாம்ராஜ் உடனான உறவை துண்டித்த மாணவி, பேச்சுவார்த்தையையும் நிறுத்தி உள்ளார். இந்த நிலையில் சாம்ராஜ், தனது நண்பர்களான முகேஷ் மற்றும் சந்தோஷ் ஆகியோருடன் மாணவியின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளனர்.

தற்கொலை தவிர்
தற்கொலை தவிர்

அப்போது, “உன்னிடம் பேச விரும்பவில்லை. எனது உறவினரான விஜய் என்பவரை நான் திருமணம் செய்து கொள்ள உள்ளேன்” என மாணவி தெரிவித்துள்ளார். இதனால் மாணவிக்கும் சாம்ராஜூக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை வெங்கடேசன், சாம்ராஜை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனையடுத்து நடந்த சம்பவத்தை சாம்ராஜ், தனது உறவினர் சம்பத் என்பவரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். பின்னர் மனமுடைந்த நிலையில் இருந்த சாம்ராஜ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அவரது தாய், சாம்ராஜ் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் சாம்ராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது சாம்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சாம்ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சாம்ராஜ் தாக்கிய பெண்ணின் தந்தை வெங்கடேசனை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் களம்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, ஆரணி - திருவண்ணாமலை சாலையில் திடீரென சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

சாம்ராஜின் உறவினர்கள் திடீர் சாலை மறியல்

பின்னர் களம்பூர் காவல்துறையினர், வெங்கடேசனை கைது செய்ய உறுதியளித்தன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் தலைமறைவான வெங்கடேசனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.