திருவண்ணாமலை: செங்கம் டவுன் புதிய பேருந்து நிலையம் எதிரேயுள்ள சகாயமாத வீதியில் இன்று (டிச.26) நாய்க்குட்டி ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்தது. இதனைக் கண்ட மற்றொரு நாய்க்குட்டி தன்னுடன் சுற்றி விளையாடிய நண்பன் இறந்துள்ளதை அறிந்து, இறந்த நாய் குட்டியின் மீது தலை வைத்து அழுத நிகழ்வு அவ்வழியாக சென்றவர்களை கண் கலங்க வைத்தது.
மேலும், அருகில் இருந்தவர்கள் இறந்துபோன நாயினை எடுத்துச்சென்று புதைத்த பிறகும் நண்பன் உயிர் நீத்த இடத்திலேயே சோகத்தோடு படுத்துக் கிடந்தது, மற்றொரு நாய்க்குட்டி. அன்பு, பாசம், பிரிவு எல்லாம் மனிதர்களுக்கு மட்டும் தான் என நினைக்கும் வேலையில் தன்னுடன் விளையாடி விபத்தில் உயிரிழந்த தன் நண்பன் தலை மேல் தலை வைத்து நாய்க்குட்டி அழுதது காண்போரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: பவுடர் டப்பாவில் மறைத்து தங்கம் கடத்தல்.. வைரலாகும் வீடியோ!