ETV Bharat / state

தேர்வு முடிவு பயத்தால் +2 மாணவன் தற்கொலை! - பள்ளி மாணவன் தற்கொலை

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவர் தேர்வு பயத்தில், விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 8, 2023, 3:40 PM IST

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அடுத்த நாராயணகுப்பம் கிராமத்தைச் சார்ந்த ராஜாமணி மகன் ஹரி. 12ஆம் வகுப்பு மாணவன் தேர்வு தோல்வி பயத்தில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மார்ச் மாதம் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று முடிந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று (மே 08) வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உயிரி - கணித பாடப்பிரிவில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஹரி இன்று காலை ஏழு மணி அளவில் தேர்வு தோல்வி பயத்தால் வீட்டின் மாடியில் தற்கொலை செய்துகொண்டார்.

A class 12 student committed suicide after failing four subjects in public exam
தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

இது குறித்து தகவலறிந்த தானிப்பாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: +2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.