ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பலதரப்பட்ட மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்துவருகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மக்களுக்குப் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின்மூலம் செயல்படுத்தப்படும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின்கீழ் சுமார் 420 மகளிர் சுய உதவி குழுக்கள் இயங்குகின்றன.
இதில் ஆறாயிரத்து 300 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு தலா ஐந்தாயிரம் என்ற அடிப்படையில் 3.15 கோடி கடன் உதவி அண்மையில் வழங்கப்பட்டது.
இதனையடுத்து ஒன்பது லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் தொகையை 10 மகளிர் சுய உதவி குழுக்களிலுள்ள 84 பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி நேற்று வழங்கினார்.
இதையும் படிங்க:நிவாரணம் வழங்காத அரசைக் கண்டித்து கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்