திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜூன் 23) வரை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,313 ஆக இருந்தது. இன்று (ஜூன் 24) புதிதாக 54 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,367 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 465 ஆக உள்ளது.
சென்னையிலிருந்து வந்த ஒன்பது பேர், காஞ்சிபுரத்திலிருந்து வந்த மூன்று பேர், பெங்களூரிலிருந்து வந்த இரண்டு பேர், செங்கல்பட்டிலிருந்து வந்த ஒருவர், நோயாளியுடன் தொடர்பிலிருந்த 19 பேர், இரண்டாம் நிலை தொற்று அடைந்த ஏழு பேர், புறநோயாளிகள் பிரிவிலிருந்து 11 பேர் உள்ளிட்ட 54 பேருக்கு இன்று கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க:'இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை'