திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த இரும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் விவசாய பம்பு செட்டில் போலி மதுபானம் தயாரிப்பதாக, தெள்ளார் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு எரிசாராயத்தில் பல்வேறு ரசாயனங்கள் கலந்து போலி டாஸ்மாக் முத்திரையுடன் மதுபானங்கள் தயாரிப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலி மதுபானம் தயாரித்த திண்டிவனம் அடுத்த எண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (34), இரும்புலி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (35), சிலம்பரசன் (28), இளவரசன் (26) ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். போலி மதுபானங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்திய உபகரணங்கள், 138 போலி மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்னர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 49 ஐபிஎஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு