ETV Bharat / state

345 லிட்டர் கள்ளச் சாராயம் விற்பனை செய்த 8 பேர் கைது! - 8 arrested in tiruvannamalai

500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டது. 345 லிட்டர் கள்ளச் சாராயம் விற்பனை செய்த 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

345 litres illicit liquor seized
345 litres illicit liquor seized
author img

By

Published : May 27, 2020, 10:27 AM IST

திருவண்ணாமலை: கள்ளச்சாராயம் விற்பனை செய்த எட்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவுப்படி, போளூர் தாலுகா பகுதியில் மது விலக்கு பிரிவினர் தேடுதல் வேட்டை நடத்தியதில் 500 லிட்டர் கள்ளச் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

மேலும், கீழ்பென்னாத்தூர் தாலுகா வழுதலங்குணம் பகுதியில் 115 லிட்டர் கள்ளச் சாராயம் வைத்திருந்த ஏழுமலை, வினோத், தண்டராம்பட்டு தாலுகா மலமஞ்சனூர் புதூர் பகுதியில் 60 லிட்டர் விற்பனைக்காக வைத்திருந்த முருகன், கீழ்பென்னாத்தூர் தாலுகா கருங்காலிகுப்பம் பகுதியில் 110 லிட்டர் வைத்திருந்த பழனி, அலெக்சாண்டர் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

345 litres illicit liquor seized
கள்ளச்சாராய ஊறல்

அதேபோல செங்கம் தாலுகா பி.எல் தண்டா பகுதியில் 60 லிட்டர் கள்ளச் சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த சந்துரு, விஜயராஜ், பச்சையப்பன் என மொத்தம் எட்டு பேரையும் காவல் துறையினர் கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.