ETV Bharat / state

திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவில் பக்தர்கள் அனுமதி - கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அனுமதி

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் கிரிவலம் செல்ல 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிப்பதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

karthigai-deepam-in-tiruvannamalai
karthigai-deepam-in-tiruvannamalai
author img

By

Published : Nov 18, 2021, 4:38 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து மக்கள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் டி.செந்தில்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், கரோனா கட்டுபாடுகள் தளர்வின்படி தமிழ்நாட்டில் கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

கல்வி நிலையங்கள், பொழுதுபோக்கு கூடங்கள், சுற்றுலா தலங்களில் மக்கள் அனுமதிக்கப்படும் வேளையில், கிரிவலத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே கரோனா, மருத்துவம், காவல், தீயணைப்பு, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பக்தர்களை அனுமதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் 20 ஆயிரம் பக்தர்களையாவது அனுமதிக்க வேண்டும் கோரிக்கைவைக்கப்பட்டது.

எவ்வளவு பேருக்கு அனுமதி

இந்த மனு மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அமர்வில் நடந்தது. அப்போது அரசு தரப்பில், "கார்த்திகை தீபத் திருவிழாவில் வழக்கமாக 15 லட்சம்பேர் வருகை தருவர். அனைவரையும் அனுமதிக்க முடியாது. பரணி தீபம் ஏற்றும் நிகழ்வில் கட்டளைதாரர்கள் 300 பேரை அனுமதிக்கலாம் என்றும், இன்றும் நாளையும் கிரிவலத்திற்கு உள்ளூரை சேர்ந்த 5 ஆயிரம் மற்றும் வெளியூரை சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம்.

இவர்களும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆனால், கோவிலுக்குள் அனுமதிக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார். அத்துடன் தீபத் திருவிழா நேரலை செய்யப்படுவதால் வீட்டிலிருந்து மக்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: Red Alert: 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.