திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வில்வாரணி பகுதியில் இருபிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்த கலையரசன் என்பவரை 10-க்கும் மேற்பட்டோர் கத்தியால் குத்தியதால் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கத்திக்குத்து ஆழமாக ஏற்பட்டதால் கலையரசன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து வில்வாரணி பகுதியில் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கவும், உயிர்சேதம் எதுவும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடு செய்யவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவது தவறு எனக் கொள்ளப்படுகிறது. மீறி அங்கே நபர்கள் கூடி, பொதுமக்களின் அமைதியை பாதிப்படையச் செய்தால் அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்கப்படும்.
இதையும் படிங்க: 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது, மூவர் தப்பி ஓட்டம்