144 தடை உத்தரவு குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,“திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக 74 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். வீடுகளில் தனிமைப்படுத்தபட்டவர்கள் ஜியோ டேக் என்ற மொபைல் ஆப் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். மேலும், கரோனா வதந்திகள் பரப்புவோர்கள் கைது செய்யப்படுவார்கள்.
144 தடையை மீறி வெளியே வருபவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும். நாளை முதல் 300 அரசுப் பேருந்துகளில் 15 பேர் கொண்ட குழுக்கல் மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளுக்கும் சென்று கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள ‘குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய்’ என்ற திட்டத்தை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு வீடு தேடி வந்து அலுவலர்கள் வழங்குவார்கள்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெளிநாட்டினர் 26 பேர் திருவண்ணாமலைக்கு சுற்றுலாவிற்காக வந்திருந்தனர். அவர்களுக்கு கரோனா குறித்த எந்த பாதிப்பும் இல்லை.
அனுமதிக்கப்பட்ட அரசு வாகனங்கள் மட்டும்தான் இன்று மாலை முதல் அனுமதிக்கப்படும் அவர்களாகவே அரசு வாகனம் என்று போர்டு வைத்துக்கொண்டு வருபவர்கள் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை பின்பற்றவில்லை எனில் ஓராண்டு சிறை