தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இத்தொற்று நோய் பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் இன்று (ஜூலை 5) திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட, 4 குழந்தைகள் என 142 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை 15 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் மே மாதம் முதல் தேதியிலிருந்து சென்னை மற்றும் வெளியூரிலிருந்து வந்தவர்களால், தொற்று அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.