திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் தெள்ளுர் கிராமத்தில் உள்ள மலை அருகே 14 குரங்குகள் இறந்து கிடந்தன. அதனைக் கண்ட பொதுமக்கள் காவல் துறை, வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து ஆய்வு செய்த வனத்துறையினர் அருகே அங்கு வாழைப்பழம் தோல்கள் கிடப்பதை கண்டறிந்தனர். அதில் மருந்து கலந்திருந்ததால் அதனை சாப்பிட்டு குரங்குகள் இறந்துவிட்டதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில், குரங்குக்கு மருந்து வைத்து இறக்கும் தருவாயில் ஆட்டோவில் வந்து இங்கு போட்டுவிட்டு சென்றதாக தெரிகிறது என்றும் ஆட்டோ வந்த தடயம் இருப்பதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினரி விசாரணை செய்து வருகின்றனர். இந்த பகுதி வனத்துறைக்கு சொந்தமான பகுதி என்பதால் வனத்துறையினர் ஒரு குரங்கை மட்டும் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: காவலருக்கு கரோனா தொற்று - குனியமுத்தூர் காவல்நிலையம் மூடப்பட்டது