ETV Bharat / state

சவுடுமண் கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் கைது - திருவண்ணாமலை செங்கம்

திருவண்ணாமலை: அனுமதியின்றி சவுடுமண் கடத்தலில் ஈடுபட்ட பத்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய அனைத்துப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

10 people arrested
10 people arrested
author img

By

Published : Jun 18, 2020, 7:43 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன. அரசு அலுவலரிடம் முறையாக அனுமதிபெறாமல் திருட்டுத்தனமாக சவுடுமண், வண்டல்மண் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பி.சக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில், மாவட்ட காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், செங்கம் பகுதியில் திடீரென ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, செங்கம் அருகே உள்ள புதுப்பட்டு பகுதியில் தனிநபருக்குச் சொந்தமான இடத்திலிருந்து செங்கல் சூளைகளுக்கு சவுடுமண் கடத்த முயன்றவர்களை, தனிப்படை காவல் துறையினர் சுற்றிவளைத்து கைதுசெய்தனர். அவர்கள் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய இரண்டு ஜேசிபி இயந்திரம் உள்பட ஐந்து டிராக்டர், மூன்று இருசக்கர வாகனம் 16 செல்போன்கள், 14 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளை அகற்ற அப்பகுதி மக்கள் பலமுறை புகார்கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டிவருவதால், இதுபோன்ற கனிம வளங்களை கொள்ளையடித்து நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக, அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பெரம்பலூரில் பழமையான கல்மரப் படிமம் கண்டெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.