திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். பணிக்கு சென்று இரவு வீடு திரும்பிய இவரை காட்டாவூர் பேருந்து நிலையம் அருகே இளைஞர்கள் சிலர் வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். உடனே தனது இரு சக்கர வாகனத்தை அவ்விடத்தில் விட்டு விட்டு யுவராஜ் தப்பியோடினார்.
இந்நிலையில் அவர்கள் இருசக்கர வாகனத்தை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதுகுறித்து யுவராஜ், பொன்னேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அவர்களில் ஒருவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் கஞ்சா போதையில் இதைச் செய்தது தெரியவந்தது.
இதையும் படிங்க:
வாசிப்பு பழக்கமே இல்லை: வைரலான மநீம வேட்பாளர் விவகாரத்தில் வெங்கடேஷ் ஆறுமுகம் விளக்கம்