திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரில் வசித்து வருபவர் வேணு - கவிதா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வருகின்றனர்.
இவர்களின் மூத்த மகன் சதீஷ் (20). இவர் மீஞ்சூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறும் திருமணத்திற்கு கடந்த 23ஆம் தேதி உணவு பரிமாறுவதற்காக வேலைக்குச் சென்றார்.
அப்போது, சமையலறையில் உணவு பாத்திரத்தை இழுத்துக் கொண்டு வந்த சதீஷ் அவரின் பின்னால் கொதித்த நிலையில் வைத்திருந்த ரசப் பாத்திரத்தில் தெரியாமல் தவறி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், உடனடியாக அந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த சதீஷ் சிகிச்சைப் பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மீஞ்சூர் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இதில் வேதனை என்னவென்றால், சதீஷ் விழுந்து காயம் அடைந்த ரசத்தை அன்றைய தினம் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் பரிமாறி உள்ளனர் என்பதுதான். மேலும் இறந்த சதீஷ், ’இதற்கு யாரும் காரணம் இல்லை; நான் தான் தவறி ரசத்தில் விழுந்துவிட்டேன்’ என்று கூறி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: மண்ட மேல இருக்க கொண்டையை மறந்திட்டீங்க மேடம்.. லேப்டாப் திருடி மாட்டிக்கொண்ட பெண் வீடியோ!