திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள வினா ஸ்ரீ யோகா ஆராய்ச்சி மையம் சார்பில் இண்டர்நேஷனல் ஒண்டர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் பொருட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரம் மாணவர்கள் இந்த சாதனையைச் செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் அகில உலக சாதனை புத்தக தென்னிந்தியா ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் தினேஷ் முன்னிலையில் ஆயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் 21 நொடிகள் தனுராசனம் செய்து சாதனை படைத்தனர். இச்சாதனைப் படைத்தவர்களுக்கு டி.ஜெ.எஸ் கல்வி குழுமம் தலைவர் கோவிந்தராஜன், திருவள்ளூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நரசிம்ம ராவ் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினார்.
21 நொடிகளில் உலகசாதனை; தனுராசனம் செய்து மாணவர்கள் அசத்தல்! - 21 minutes dhanurasanam
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற யோகாசன நிகழ்ச்சியில் 21 நொடிகள் தனுராசனம் செய்து இண்டர்நேஷனல் ஒண்டர் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்து மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.