ETV Bharat / state

குடிநீர் பிரச்னையால் குமுறும் மக்கள்: திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! - காலிக்குடங்களுடன் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம்

திருவள்ளூர்: மணவூர் அருகே பாகசாலை காலனியில் கடந்த ஆறு மாத காலமாக நிலவிவரும் குடிநீர் பிரச்னையைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Protest
author img

By

Published : Jun 4, 2019, 8:21 AM IST

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்துக்குட்பட்ட பாகசாலை காலனியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் பல்வேறு குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்த வீடுகளுக்கு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஆழ்துளை கிணறு மூலம் நீர் நிரப்பப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் அந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி அருகே அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணறு பழுதடைந்ததால் அருகில் மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம் நீர் ஊற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்

ஆனால் கடந்த சில மாதங்களாக அந்த ஆழ்துளை கிணற்றில் நீர் வறண்டு போனதால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. இது குறித்து ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனையடுத்து பாகசாலை காலனியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உறுதி அளித்த பின் அவர்கள் அனைவரும் கலைந்துசென்றனர்.

Intro:திருவள்ளூர் மாவட்டம் மணவூர் அருகே பாகசாலை காலனியில் கடந்த ஆறு மாத காலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினை போன்று நிர்வாகத்தினர் தீர்த்து வைக்காததால் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Body:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்துக்குட்பட்ட பாகசாலை காலனியில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளனர் இந்த வீடுகளுக்கு ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஆழ்துளை கிணறு மூலம் நீர் ஊற்றி குடிநீர் விநியோகிக்கப்படும். இந்த நிலையில் அந்த குடிநீர் மேல்நிலை தொட்டி அருகே அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக்கிணறு பழுதடைந்ததால் அருகில் மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம் நீர் ஊற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக அந்த ஆழ்துளை கிணற்றில் நீர் வறண்டு போனதால் குடிநீர் பிரச்சினை கடுமையாக நிலவி வருகிறது இது குறித்து ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையொட்டி பாகசாலை காலனியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உறுதி அளித்ததின் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.