ETV Bharat / state

கடன் தொல்லை - மகளுடன் பெண் வழக்கறிஞர் தற்கொலை - tiruvallur crime news

கும்மிடிப்பூண்டி அருகே கடன் தொல்லை காரணமாக வழக்கறிஞர் ஒருவர் தனது மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை
author img

By

Published : Jul 27, 2021, 6:20 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கீதாஞ்சலி(50). இவரது கணவர் உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், பி.காம் பட்டதாரியான மகள் சிவரஞ்சனியுடன்(24) வசித்து வந்தார்.

இவர் போதிய வருமானம் இல்லாததால், தனது மகளைப் படிக்க வைக்க ஏகப்பட்ட கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி தராததால் கீதாஞ்சலியிடம், கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

இதனால் மன உளைச்சலில் இருந்த கீதாஞ்சலி வீட்டிலிருந்த மின்விசிறியில் தனது மகள் சிவரஞ்சனியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர்களது வீட்டின் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

அத்தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, இருவரும் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தனர். இதனையடுத்து அவர்களின் உடல்களை காவல் துறையினர் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக பெண் வழக்கறிஞர், தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருமணம் ஆன மூன்றே நாள்களில் சாணி பவுடர் குடித்து பெண் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.