ETV Bharat / state

திருமணமான ஒன்றரை மாதத்தில் பெண் தற்கொலை: கணவரிடம் தீவிர விசாரணை - today thiruvallur news

திருவள்ளூர்: திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதால், அவரின் கணவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Woman commit suicide in one and half month of marriage
author img

By

Published : Nov 7, 2019, 11:34 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகேயுள்ள மேல்மதலம்பேடு மேல் காலனிப் பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமிக்கும், ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. நாகராஜ், தனது மனைவி வீட்டிலேயே தங்கி பெயிண்டர் வேலை செய்துவந்துள்ளார். நாகராஜ் வழக்கம் போல் இன்று வேலைக்குச் சென்றுள்ளார். கணவர் வேலைக்குச் சென்ற பின் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக ராஜலட்சுமி தனது அறையில் தூக்குப் போட்டுள்ளார். ராஜலட்சுமியை காணவில்லை என்பதால், அவருடைய தம்பி ராஜலட்சுமி அறைக்குச் சென்று பார்த்துள்ளார்.

அப்போது ராஜலட்சுமி தூக்கில் தொங்கி இருப்பதைக் கண்டு அதிர்ந்த அவர் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்து கவரப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் ராஜலட்சுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட ராஜலட்சுமி

மேலும் ராஜலட்சுமியின் தற்கொலைக்கு குடும்பத் தகராறு காரணமா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா போன்ற கேள்விகளோடு ராஜலட்சுமியின் கணவர் நாகராஜ், அவரின் தாயார் ஆகியோரிடம் காவல் துறையினரும், வருவாய் கோட்டாட்சியர் நந்தகுமாரும் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: தாயைச் சுத்தியலால் அடித்துக் கொலை செய்த மனநலம் பாதித்த மகன் கைது!

Intro:திருவள்ளூரில் திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை கணவன் மற்றும் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தாயிடம் போலீசார் விசாரணை.Body:திருவள்ளூரில் திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை கணவன் மற்றும் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தாயிடம் போலீசார் விசாரணை.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.