திருவள்ளுர் மப்பேடு அடுத்த ஏலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பத்மாவதி (70) நேற்று (ஏப்.12) இரவு தனது வீட்டில் சோபாவில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது செல்போன் சார்ஜர் வயர் சுவிட்ச்ஆஃப் செய்யாமல் இருந்துள்ளது.
அந்த வயர் சோபா மீது நீண்ட நேரம் பட்டதால் எதிர்பாராதவிதமாக அந்த வயரிலிருந்து மின்கசிவு ஏற்பட்டதில் சோபா மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியதால் சோபாவில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த பத்மாவதி மீது தீ பரவியுள்ளது.
அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டதும் அவர் மருமகள் ஓடிவந்து பார்க்கும்போது தீ மளமளவென எரிய தொடங்கியதால், அவர் கூச்சல் போட்டதால் அருகே இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு திருவள்ளுர் அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்துள்ளனர். ஆனால் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அங்கே அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தால் அக்கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இது தொடர்பாக மப்பேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி