ETV Bharat / state

கோடை காலத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை என்ன? -மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

திருவள்ளூர்: மாவட்டத்தில் கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவி குமார் அறிவிப்பு விடுத்துள்ளார்.

கோடை காலத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை, வேண்டாதவை என்ன? -மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

author img

By

Published : May 13, 2020, 2:38 PM IST

கோடை காலத்தில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள கீழ்காணும் வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் அறிவித்துள்ளார்.

கோடை காலத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டியவை:

  • அதிக வெப்பம் தொடர்பாக வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள் வாயிலாக நாள்தோறும் வெளியிடப்படும் செய்திகளை தெரிந்துகொள்ள வேண்டும்.
  • சாறு நிறைந்த பழங்களை அதிக அளவில் உட்கொள்ளவும், தாகம் வரும் வரை காத்திராமல் அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும்.
  • அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.
  • காற்றோட்டமான மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
  • வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது, கண்ணாடி, குடை, காலணி, அணிந்து செல்ல வேண்டும்.
  • தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வெளியே செல்லும்போது குடிநீர் எடுத்துச் செல்வதுடன், தலை, கழுத்து, கைகளை சிறிது ஈரமான துணியால் மூடி செல்ல வேண்டும்.
  • வீட்டில் தயாரிக்கப்படும் மோர், எலுமிச்சம் பழம் சாறு ஆகிய குளிர்பானங்களையும், அரிசி, கஞ்சி போன்ற உணவு பானங்களையும் அருந்த வேண்டும்.
  • வெப்பத்தின் காரணமாக ஏற்படும் உடல் பாதிப்புக்கள் அதாவது, பக்க வாதம், சொறி சிரங்கு, உடல் தளர்ச்சி, தலைவலி ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
  • வீட்டிலுள்ள கால்நடைகளை நிழலான இடங்களில் தங்க வைப்பது அவற்றுக்குத் தேவையான அளவு தண்ணீர் அடிக்கடி வழங்கிட வேண்டும்.

கோடை காலத்தில் செய்ய கூடாதவை எவை?

  • பொதுமக்கள் அவசிய தேவை இன்றி வெயிலில் செல்ல வேண்டாம். பொதுவாக நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • சர்க்கரை அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.
  • மிகக் குளிர்ந்த பானங்களை அருந்துவதைத் தவிர்க்கவும்.
  • குழந்தைகள், செல்லப்பிராணிகளை வாகனம் நிறுத்தும் இடங்களில் விட்டு செல்ல வேண்டாம்
  • இறுக்கமான ஆடைகள் கோடை காலத்தில் அணியவும் தவிர்க்கவும்.

இவைகள் அனைத்தும் நாம் பின்பற்றினால் நாம் நலமுடன் வாழ முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...’கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.