தனியார் நிறுவனம் காட்டுப்பள்ளி ஊராட்சியில் உள்ள செப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவனம், சுமார் 23 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழா நேற்று நடைபெற்றது. காட்டுப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சேதுராமன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஹைட்ரோ கார்பன் திட்ட நிர்வாகிகளின் தலைவர் ஸ்ரீகாந்த் குல்கர்னி, ஸ்ரீதர், செந்தில்குமார், கிருஷ்ணமூர்த்தி, மீஞ்சூர் ஒன்றியக் குழுத் தலைவர் ரவி மாவட்ட கவுன்சிலர் உதயசூரியன், முன்னாள் காட்டுப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
மேலும், கிராம நிர்வாகிகள் பலர் உடனடிருந்து விழாவினைச் சிறப்பித்தனர்.
இதையும் படிங்க: 'ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுங்கள்' - கடலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்